Saturday, 7 April 2012

திரவியம் தேடுவோம்

வாழ்கையில் மிகவும் சாதாரன நிலையிலிருந்து உயர்ந்தவர்களை பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது 'எப்படி இவர்களால் முடிந்தது நம்மால் முடியாமல் போனது' என்கிற ஆதங்கம் சில நேரம் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் நம்மைவிட மிகவும் பின் தங்கியிருக்கிறார் ஆனால் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு எப்படி இவரால் மட்டும் முன்னேற முடிந்தது என்று பல சந்தர்ப்பங்களில் ஆதங்கப் பட்டிருக்கிறேன். இது கண்டிப்பாக அவர்களின் மீதுள்ள பொறாமையின் வெளிப்பாடு கிடையாது, என்னால் முடியவில்லையே என்ற இயலாமையின் வெளிப்பாடுதான். 


Monday, 26 March 2012

இந்த ஆண்டு இறுதிக்குள் துபாய் வாழ் வெளிநாட்டவார்களுக்கு ஓய்வூதிய திட்டம்

துபாய் வாழ் வெளிநாட்டவார்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற் காண சாத்தியகூறு ஆய்வுகள் முடிவடைந்து விட்டதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று துபாய் பொருறாதார அபிவிருத்தி துறை அறிவித்துள்ளது.

இத் திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் பயன்படும் வகையில் அமல்படுத்த பட உள்ளது.

பொருறாதார அபிவிருத்தி துறை, இத் திட்டம்  வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் குறிப்பாக பொருளாதார பிரச்சனைகள் (Graduatity) எனப்படும் இறுதியில் வழங்க வேண்டிய தொகையில் எற்படும் குளறுபடிகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இத்திட்டம் சரியாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் அது கண்டிப்பாக இந்தியர்களுக்கும் மற்ற நட்டவர்களுக்கும் அதிலும் குறிப்பாக பதினைந்து இருபது ஆண்டுகள் கழித்துவிட்டு ஊர்போய் என்ன செய்வது என்ற கேள்வி குறியோடு திரும்பும் நிலை மாறி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவாவது மாத வருமாணம் உள்ளது என்ற நிலை ஏற்படலாம்.

எண்ணற்ற புதுமைகள் செய்து சாதனை படைத்துவரும் துபாய் வெளிநாட்டு தெழிளார்களின் பொருளாதார ஸ்திரமின்மையை கருத்தில் கொண்டு அவர்களுக்காக ஒரு ஓய்வூதியம் திட்டம் கொண்டு வந்து மற்ற அரபு நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக துபாய் திகழும் என்பதில் ஐயமில்லை.


Wednesday, 26 October 2011

மத வெறி பிடித்த பதிவுகள்...!


உலகில் உள்ள எந்த ஒரு விசயமும் விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டது கிடையாது> மதங்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டதுதான்

ஆனால் எந்த ஒரு விமர்சனமும் அறிவு தேடலின் அடிப்படையில் அமையவேண்டும்.

எதையும் விமர்சிக்கும் முன்பு அவ்விசயத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு பின் அவற்றின் சரி தவறுகளை விமர்சித்துவிட்டு அதற்க்கு மாற்றமான சிறந்த ஒன்றை பரித்துரை செய்யவேண்டும்.

ஆனால் பதிவுலகில் மதங்களை பற்றி வரும் பெரும்பாலான பதிவுகள் மதங்களின் கொள்கை கோட்பாடுகளை விமர்சிக்காமல் மதத்தின் பெயரால் அதுவும் வெகு சிலரின் செயல்களையும் சில நிகழ்வுகளை மதத்தோடும் கடவுள் நம்பிக்கையோடும் தொடர்பு படுத்தி கடவுள் கொள்கையை வசைபாடி தீர்கின்றனவே தவிர அரோக்கியமான விமர்சனமோ விவாதமே என்றுமே நடந்தது இல்லை.

விமர்சனங்கள் ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகை செய்ய வேண்டுமே தவிர எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்கின்ற வேலையை செய்யக் கூடாது.

சினிமாவை அல்லது அரசியலை போன்று விமர்சிப்பது அல்ல கடவுள் கொள்கை. சினிமாவை பற்றிய விமர்சனங்களால் இங்கு கலவரங்களோ பாதிப்புகளோ ஏற்படுவது கிடையாது அதோபோல் அரசியல் விமர்சனங்கள் அரசியல் வாதிகளாளேயே தரம் தாழ்த்தப் பட்டடுவிட்டதால் அது சாதாரண மக்களை ஒரு செய்தி என்ற அளவினை தாண்டி பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துவது கிடையாது. ஆனால் மதத்தினை பற்றிய விமர்சனங்கள் மக்களை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கிறது பல நேரங்களில் கலவரங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன> இப்படிபட்ட ஒரு விடயம் அதீத கவணத்துடன் கையாளப்பட வேண்டும் என்ற சமுக அக்கரை சிறிதும் இல்லாமல் மதங்களை கேலியும் கிண்டலும் செய்யும் பதிவுகளை என்னவெற்று சொல்வது.
          
கடவுள் கொள்கை என்பது ஒரு மனிதன் பிறந்தது முதல் போதிக்கபடுகிறது பெரும்பாலும் ஏன்> எதற்கு> எப்படி என்ற எதிர் கேள்வியின்றி நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள போதிக்கப் படுகிறது> மதம் இங்கு வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அங்கம் வகிக்கிறது. ஒருவனின் கடவுள் கொள்கையை பொய் என்றும் தவறு என்றும் சொல்லப்படும் போது அதை மறுக்கவும் எதிர்வாதம் செய்யவும் தம் மதத்தை பற்றிய பூரண அறிவு இல்லாத போது அது கோபமாகவும் வேறவித எதிர்விணையாகவும் வெளிப்படுகிறது. அதுவே இனையதளங்களில் பின்னுட்டம் என்ற பெயரில் தனிமனித தாங்குதல்களும் குறிப்பிட்ட சமுதாத்தினர் மீது அசிங்கமான அர்ச்சனைகளுமாக செய்யபடுகின்றனவே தவிர கருத்துக்கு எதிரான மாற்றக் கருத்தை அறிவுபூர்வமாக யாரும் எடுத்து வைப்பது இல்லை. 


இதற்க்கு கடவுள் கொள்கை பொருப்பாக முடியாது என்ற யதார்தத்தை உணர்ந்து ஒரு மதத்தினை பற்றி விமர்சிக்க நினைப்பவர் அதைபற்றி பூரணமாக அறிந்தவர்களோடு விவாதிக்க முன் வரவேண்டுமே தவிர இணையம் என்ற திறந்தவெளியில் மதத்தினை விமர்சிப்பது மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளை போன்று மத்தினை விமர்சித்து அதிக ஹிட்டுகள் வாங்க முற்படும் பதிவுலக வியாபரிகள். 

இத்தகைய மதவெறிபிடித்த பதிவுகளில் விவாதம் செய்ய முற்படும் சகோதரர்களுக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களுக்கு என் வேண்டுகோள் இதுதான் இத்;தகைய மதவெறி பிடித்த பதிவர்கள் அடிக்கடி சீண்டுவது முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் தான்> இஸ்லாம் விமர்சனங்களை கண்டு  ஒருபோதும் பின்வாங்கியது இல்லை ஆனால் அது நெறியான முறையான ஒரு களத்தில் அமையவேண்டு இல்லையேனில் அது ஒருபோதும் முற்றுபெறாத விதண்டாவாதமாகவும் வீண்தர்கமாகவும் அமையும். இத்தகைய வீண்தர்கத்தைதான் கடவுள் கொள்கைகளை விமர்சிக்கும் வியாபாரிகளின் வியாபார யுக்தி என்பதை கருத்தில் கொண்டு மதவெறிபிடித்த பதிவுகளை உதாசீனப்படுத்துங்கள்.

Sunday, 15 May 2011

இது ஒரு துரோக வரலாறு...,

சமுகத்தில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகளை நம் பார்வைக்கு தருவதில் மிகப் பொரும் பங்கு வகிப்பது தொலைகாட்சிதான். 

இப்படி ஒரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் மனிதர்களின் சமுகபார்வை ஒரு குறுகிய வட்டதிற்குள்ளேயே முடங்கி போயிருக்கும். 

Saturday, 14 May 2011

மம்மி தி மாஸ்.!


உலக கோப்பை கிரிகெட் இறுதி ஆட்டத்தை டீவியில் பார்த்தபோது ஏற்பட்ட அதே பரபரப்பு மீண்டும் தேர்தல் முடிவுகளை இன்று டீவியில் பார்க்கும் போது ற்பட்டது. தேர்தல் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி யார் ஆட்சியில் அமர போகிறார்கள் என்று தெரிய ஆரம்பித்தவுடன் கிளைமேக்ஸ் தெரிந்த படத்தை பார்க்கும் உணர்வே ஏற்பட்டது இதற்க்கு மேல் வேறு எந்த ஒரு தாக்கத்தையும்; இதுபோன்ற தேர்தல்களும் அதன் முடிவுகளும் ஏற்படுத்திவிட போவது இல்லை.
 

Thursday, 21 April 2011

வழக்கு ஒன்று தீர்ப்புகள் பலவிதம்.., மன்னித்துவிடு மாணவனே, இது எங்கள் ஜனநாயக நாடு....


வழக்கு

1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் மாணவர் நாவரசு, சீனியர் ஜான்டேவிட்டால் ராக்கிங் என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்யபட்டார்.


தீர்ப்பு-1

1998-ம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு கூறியது.

தீர்ப்பு-2

1998-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் போதுமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஜான்டேவிட்டுக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பு-3

2011-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடலுர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.

ச்ச நீதிமன்றத்திற்க்கு மேல் வேறு ஏதாவது நீதிமன்றங்கள் மிச்சமிருந்தால் இந்த தீர்ப்பு இனியும் மாற்றப்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது.

Wednesday, 20 April 2011

புரட்சி நாயகர்கள்.....!

புரட்சி தலைவரே..!
புரட்சி தலைவியே..!
புரட்சி தளபதி..!
புரட்சி கலைஞரே..!
புரட்சி தமிழன்..! என்று தமிழில் புரட்சி என்ற வார்த்தை எந்த அளவு கொச்சைபடுத்த முடியுமோ அந்த அளவு கொச்சைபடுத்த பட்டு கேலி செய்யப்பட்டு இப்வெல்லாம் "புரட்சி தமிழன்" என்ற வார்த்தைக்கும் "நாய் சேகர்" என்ற வார்த்தைக்கும் அதிக வித்தியசத்தை உணர முடியவில்லை.