Saturday, 7 April 2012

திரவியம் தேடுவோம்

வாழ்கையில் மிகவும் சாதாரன நிலையிலிருந்து உயர்ந்தவர்களை பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது 'எப்படி இவர்களால் முடிந்தது நம்மால் முடியாமல் போனது' என்கிற ஆதங்கம் சில நேரம் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் நம்மைவிட மிகவும் பின் தங்கியிருக்கிறார் ஆனால் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு எப்படி இவரால் மட்டும் முன்னேற முடிந்தது என்று பல சந்தர்ப்பங்களில் ஆதங்கப் பட்டிருக்கிறேன். இது கண்டிப்பாக அவர்களின் மீதுள்ள பொறாமையின் வெளிப்பாடு கிடையாது, என்னால் முடியவில்லையே என்ற இயலாமையின் வெளிப்பாடுதான். 


சில நாட்க்களுக்கு முன்பு ஒருவரை சந்தித்தேன், அவர் நான் துபை வந்த நேரம் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கின்றேன் ஒரு சாதாரண ஜெனிட்டராக (சுத்தம் செய்யும் தெழிலாளி) இருந்தார் ஆனால் இன்றோ அறுபது எழுபது பேர் வேலை செய்யும் ஒரு கீளீனிங் கம்பெணியின் முதலாளி மேலும் ஒரு வேறு ஒரு நிருவனத்தில் முழு நேர பணியாளராகவும் இருக்கிறார். எப்படி இதெல்லாம் முடிந்தது என்ற ஆச்சரியத்தில் அவரோடு பேசிக் கெண்டிருந்தபோது நம்மால் இதெல்லாம் முடியுமா என்று தயங்குகிற விசயங்களை சாதாரண விசயமாக கூறினார். இவரை போன்றவர்கள் வாழ்வில் உயர்ந்ததிற்கும் என்னை போன்று பெரும்பாலானவர்கள் வேலை செய்தே காலத்தை கடந்துவற்க்கும் என்ன காரணம் என்று யோசிக்கும் போது முதலாவதாக தைரியம் இன்மை   
 
வேலை செய்து சம்பாதிப்பதற்கு மிகப்பெரிய தைரியமோ தன்னம்பிக்கையோ தேவையில்லை அனால் நாம் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஒரு தொழில் தொடங்குவதற்கு கண்டிப்பாக தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நகையாகவோ அல்லது இடமாகவோ மாற்றி சேமித்து வைக்கும்போது அது எதிர்காலத்தில் நம் தேவைக்கு பயன்படும் என்று நினைக்கிறோம் ஆனால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் நம்மை போன்றவர்களின் சேமிப்புகள் ஊரில் வீடு கட்ட, மகளின் திருமணம், மகனின் படிப்பு அல்லது மருத்துவ செலவு என்று விரைவாக கரைந்து பதினைந்து இருபது வருட உழைப்பும் தீர்ந்து இனி வருமானத்திற்கு ஒன்றுமில்லை அல்லது கடன் என்ற நிலைக்கு வந்துவிடுகிறோம் அப்படி வரும்போது தான் வேலைசெய்யும் நிறுவனத்தின் முதலாளின் கையை காலை பிடித்து தான் வேலை பார்த்த நிறுவனத்திலேயே தன் மகனையும் சேர்த்துவிட்டு உடலும் மனதும் சோர்ந்து ஊர் திரும்பும் பலரை நாம் இங்கு காண முடியும்.  அடுத்தபடியாக ஒரு தொழில் தொடங்குவதற்கு குடும்பத்தின் ஆதரவு இன்மை 
பொதுவாக வெளிநாட்டடிற்கு வேலைக்கு போவதற்காக நகைகளை சொத்தை அடமானம் வைப்பதற்கோ விற்பதற்கோ ஆதரவு தரும் குடும்பம் ஒரு தொழில் தொடங்குவதற்காக நகையையோ சொத்தையோ கேட்டால் தயங்குவார்கள் அல்லது கட்டாயமாக மறுத்துவிடுவார்கள் என்ன வேலை எவ்வளவு சம்பளம் என்று கேள்வி கேட்காமல் நகையை கழட்டி கொடுக்கும் நமது வீட்டுப் பெண்கள் தொழில் வியாபாரம் என்று நகைகளை தந்து உதவி கேட்கும் போது மகள் வளருகிறாள் மகன் படிப்புக்கு என்று எதேதோ காரணம் சொல்லி மறுத்துவிடுகிறார்கள். அடுத்ததாக எந்த ஒரு தெழிலைபற்றியும் அறிவின்மை 
பெரும்பாலும் வளைகுடா நாடுகளில்  இருக்கும் நாம், வேலை மற்றும் தங்குமிடம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழுகிறோம் மேற்படிப்பு அல்லது மற்ற தகுதிகளை வளர்த்துகொள்ள எந்த முயற்சியும் எடுப்பதில்லை அதனால் தான் தன்னம்பிகை இன்றி வேலை நிரந்திரம் இல்லாத சூழலில்  நம் வாழ்வில் பெரும்பகுதியை பயத்துடனே கழிக்க நேரிடுகிறது.




 இதுபோன்ற ஒரு நிலையிலிருந்து நம்மை காப்பாற்றிகொள்ள நாம் நமது எண்ணத்தையும் செயலையும் மாற்றிக்கொள்ள வேண்டும் நமது சம்பாத்தியத்தை வெறும் நகை அல்லது இடம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஒரு தொழிலில் முதலீடு செய்து நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


சரி சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் என்ன தொழில் செய்வது எங்கிருந்த தொடங்குவது என்று குழப்பமாக இருக்கும் ஆனால் சற்று முயற்சி செய்தால் அனைத்தும் இலகுவாக முடிய கூடியதே உதாரணமாக துபையிலோ அல்லது சார்ஜாவிலோ ஒரு நிறுவனம் தெடங்குவதற்;கு அல்லது ஒரு கடை தொடங்குவதற்கோ மிகவும் எளிய நடை தெடங்குவதற்கு உள்ளன சரியான விவரங்களோடு சம்பந்தபட்ட அரசு துறையை அணுகினால் எளிதாக முடிய கூடியதே ஆனால் நம்மில் பலர் தேவையில்லாத பயத்தின் காரணமாக எந்த முயற்சியும் செய்யாமல் விட்டுவிடுகிறோம் சார்ஜா பொருளாதார வளர்ச்சி துறையில் ஒரு நிறுவனத்தின் பெயரை பதிவு செய்ய வாங்கும் கட்டணம் வெறும் இருநூற்றி ஐம்பது திரகம் தான் இதை போன்றுதான் நாம் மலைப்பாக எண்ணும் பல விசயங்கள் சாதாரணமாக முடிக்க கூடியது தான். 
சரியாக திட்டமிட்டு முறையாக செய்தால் அமீரகத்தில் ஒரு தொழில் தொடங்கி வெற்றிபெறுவது என்பது கண்டிப்பாக யாராலும் முடிய கூடியதே அதிலும் குறிப்பாக பொருளாதார மந்த நிலையின் காரணமாக அமீரகத்தில் இடங்களின் வாடகைகள் குறைந்த நிலையில் தொழில் தொடங்குவதற்கு இது சிறந்த காலமாக எனக்கு தோன்றுகிறது ஏனெனில் அடிப்படை தேவைகளுக்காண முதலீடு குறைந்த அளவே போதுமானது. ஒரு தொழில் தொடங்க முடிவு செய்துவிட்டால் அதிலும் குறிப்பாக நீண்ட வருடங்கள் வளைகுடா நாடுகளில் கழித்துவிட்டு ஊருக்கு சென்று ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு என் அறிவுரை நீங்கள் செய்ய விரும்பும் தொழிலை இங்கயே முயற்சி செய்யுங்கள்  என்பதுதான் அது ஏன் என்று எனது வேறு பதிவில் சொல்கிறேன். 

இறைவன் நாடினால்..,

No comments:

Post a Comment