Saturday, 14 May 2011

மம்மி தி மாஸ்.!


உலக கோப்பை கிரிகெட் இறுதி ஆட்டத்தை டீவியில் பார்த்தபோது ஏற்பட்ட அதே பரபரப்பு மீண்டும் தேர்தல் முடிவுகளை இன்று டீவியில் பார்க்கும் போது ற்பட்டது. தேர்தல் முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி யார் ஆட்சியில் அமர போகிறார்கள் என்று தெரிய ஆரம்பித்தவுடன் கிளைமேக்ஸ் தெரிந்த படத்தை பார்க்கும் உணர்வே ஏற்பட்டது இதற்க்கு மேல் வேறு எந்த ஒரு தாக்கத்தையும்; இதுபோன்ற தேர்தல்களும் அதன் முடிவுகளும் ஏற்படுத்திவிட போவது இல்லை.
 
இந்தியாவின் உலக கோப்பை சாம்பியன் பட்டம் ஆடிபாடி கொண்டாடி மகிழ்ந்த ரசிக குஞ்சாமணிகளுக்கு எப்படி எந்த ஒரு பயனையும் தந்துவிட போவதில்லையோ அதே போன்று இந்த ஆட்சி மாற்றமும் இன்று ஆடிபாடும் கீழ்நிலை தொன்டனின் வாழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் தந்துவிடப்போவதில்லை.


மம்மி மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக போகிறார்> பால்கனியல் நின்று இரண்டு நிமிட தரிசனம் தந்தபோதும் சரி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோதும் சரி முகத்தில் உற்சாகத்தையோ சந்தோஷத்தையோ காணமுடியவில்லை.  

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் அம்மாவீட்டு கதவுக்கு பின்னால் நிழலாடிய தோழியை பார்த்தபோது திமுகா’வின் படிதோல்வியால் ஏற்பட்ட சிறு சந்தோஷமும் காணாமல் போயின.

மம்மியின் இந்த இமாலய வெற்றிக்கு காரணம்> திமுகவின் ஊழல்> மின்வெட்டு> குடும்ப அரசியல் என்று ஆளுக்கு ஒரு காரணம் சொல்கிறார்கள் ஆனால் .தி.மு. வின் வெற்றிக்கு காரணம் அம்மா ஒரு திறமையான முதல்வர் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் சோ.   சிரிக்காமல் ஜொக்கடிப்பதில் சோ விற்கு நிகர் சோ மட்டும்தான்.

அம்மா> திமுகவின் இலவசம் என்கின்ற 'மக்கள் பிச்சைகார திட்டங்களுக்கு மாற்றாக வேறு சில பிச்சை திட்டங்களை தேர்தல் அறிக்கையாக தந்தாரே ஒழிய மின்வெட்டு விலைவாசி உயர்வு போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்பதற்காக எந்த ஒரு உருப்படியன திட்டமும் அம்மாவிடம் இருப்பதாக தெரியவில்லை.

ஊழல் செய்த எத்தனை அரசியல்வதிகளின் சொத்தை அரசு பறிமுதல் செய்துள்ளது? திருடன் பிடிக்கப்படும் போது அவன் திருடிய பொருள்கள் திரும்ப கைபற்றபட வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளால் ஊழல்; நடத்தபடும் போது ஆட்சிமாற்றம் பதவி நீக்கம் என்று திருடுவதிலிருந்து தற்காலிக ஓய்வு பெருகிறார்களே தவிர திருடிச் சேர்த்த சொத்துக்கள் பறிக்கப் படுவதில்லை. சில காலங்களுக்கு வழக்கு நீதிமன்ற விசாரணை என்று ஊடக வியாபாரங்களுக்கு விளம்பரமாக பயன்படுவார்கள்.
 
எத்தனையோ தேர்தல்களையும் ஆட்சி மாற்றங்களையும் தமிழகம் சந்தித்துவிட்டது இவனுக்கு அவன் தேவலாம் அவனுக்கு இவன் தேவலாம் என்ற நிர்பந்தத்தின் காரணமாகவே மக்களால் ஆட்சி மாற்றம் நிகழ்த்தப் படுகிறதே தவிற நல்லாட்சி அமைத்திடும் என்ற நம்பிக்கை எல்லாம் கிடையாது.

ஆட்சி மாற்றம் இங்கு வெறும் ஆட்கள் மாற்றமே தவிர வேறு ஒன்றும் மாறிவிட போவதில்லை.



8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாங்க..

சண்முககுமார் said...

தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

http://tamilthirati.corank.com/

தங்கள் வருகை இனிதாகுக

மதுரை சரவணன் said...

என்னத்த சொல்ல.. அம்மா சிறந்த ஆட்சி தருவார் நம்புங்கள்.. வாழ்த்துக்கள்

ஆதில் said...

________________________________________________
//# கவிதை வீதி # சௌந்தர் said...

வாங்க..
//
ஆதில்: இதோ வந்துட்டேன்..!சௌந்தர்
________________________________________________

//சண்முககுமார் said...

தமிழ் திரட்டிகளில் முதன்மை திரட்டியான-- தமிழ் திரட்டியில் -- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெற உங்களை அழைத்து மகிழ்கிறோம் தங்கள் பதிவை இணைக்க முகவரி

http://tamilthirati.corank.com/

தங்கள் வருகை இனிதாகுக //

ஆதில்: இணைந்துவிட்டேன் தங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றி திரு. சண்முககுமார் அவர்களே.
________________________________________________

// மதுரை சரவணன் said...

என்னத்த சொல்ல.. அம்மா சிறந்த ஆட்சி தருவார் நம்புங்கள்.. வாழ்த்துக்கள் //

ஆதில்: நம்புவோம் சரவணன் இருந்த ஓட்டும் போட்டாகிவிட்டது இனி நம்புவதை தவிர வேறு வழி இல்லலையே!
________________________________________________

Unknown said...

இப்படி இருக்குமோ
http://www.youtube.com/watch?v=apkSkb6Ak3I

ஆதில் said...

________________________________________________

Ganapathy said...

இப்படி இருக்குமோ
http://www.youtube.com/watch?v=apkSkb6Ak3I

________________________________________________
ஆதில்: இது உண்மையா இருந்தா என்ன? பொய்யாக இருந்தா என்ன? தோற்றது என்ன மகாத்மாவா? திருடா அல்லது திருடி இதற்க்கு மேல் என்ன சாய்ஸ் இருக்கு நமக்கு? கணபதி.

Unknown said...

ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

Unknown said...
This comment has been removed by the author.

Post a Comment