Wednesday 26 October 2011

மத வெறி பிடித்த பதிவுகள்...!


உலகில் உள்ள எந்த ஒரு விசயமும் விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டது கிடையாது> மதங்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டதுதான்

ஆனால் எந்த ஒரு விமர்சனமும் அறிவு தேடலின் அடிப்படையில் அமையவேண்டும்.

எதையும் விமர்சிக்கும் முன்பு அவ்விசயத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொண்டு பின் அவற்றின் சரி தவறுகளை விமர்சித்துவிட்டு அதற்க்கு மாற்றமான சிறந்த ஒன்றை பரித்துரை செய்யவேண்டும்.

ஆனால் பதிவுலகில் மதங்களை பற்றி வரும் பெரும்பாலான பதிவுகள் மதங்களின் கொள்கை கோட்பாடுகளை விமர்சிக்காமல் மதத்தின் பெயரால் அதுவும் வெகு சிலரின் செயல்களையும் சில நிகழ்வுகளை மதத்தோடும் கடவுள் நம்பிக்கையோடும் தொடர்பு படுத்தி கடவுள் கொள்கையை வசைபாடி தீர்கின்றனவே தவிர அரோக்கியமான விமர்சனமோ விவாதமே என்றுமே நடந்தது இல்லை.

விமர்சனங்கள் ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகை செய்ய வேண்டுமே தவிர எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்கின்ற வேலையை செய்யக் கூடாது.

சினிமாவை அல்லது அரசியலை போன்று விமர்சிப்பது அல்ல கடவுள் கொள்கை. சினிமாவை பற்றிய விமர்சனங்களால் இங்கு கலவரங்களோ பாதிப்புகளோ ஏற்படுவது கிடையாது அதோபோல் அரசியல் விமர்சனங்கள் அரசியல் வாதிகளாளேயே தரம் தாழ்த்தப் பட்டடுவிட்டதால் அது சாதாரண மக்களை ஒரு செய்தி என்ற அளவினை தாண்டி பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துவது கிடையாது. ஆனால் மதத்தினை பற்றிய விமர்சனங்கள் மக்களை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கிறது பல நேரங்களில் கலவரங்கள் ஏற்பட காரணமாக அமைகின்றன> இப்படிபட்ட ஒரு விடயம் அதீத கவணத்துடன் கையாளப்பட வேண்டும் என்ற சமுக அக்கரை சிறிதும் இல்லாமல் மதங்களை கேலியும் கிண்டலும் செய்யும் பதிவுகளை என்னவெற்று சொல்வது.
          
கடவுள் கொள்கை என்பது ஒரு மனிதன் பிறந்தது முதல் போதிக்கபடுகிறது பெரும்பாலும் ஏன்> எதற்கு> எப்படி என்ற எதிர் கேள்வியின்றி நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள போதிக்கப் படுகிறது> மதம் இங்கு வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அங்கம் வகிக்கிறது. ஒருவனின் கடவுள் கொள்கையை பொய் என்றும் தவறு என்றும் சொல்லப்படும் போது அதை மறுக்கவும் எதிர்வாதம் செய்யவும் தம் மதத்தை பற்றிய பூரண அறிவு இல்லாத போது அது கோபமாகவும் வேறவித எதிர்விணையாகவும் வெளிப்படுகிறது. அதுவே இனையதளங்களில் பின்னுட்டம் என்ற பெயரில் தனிமனித தாங்குதல்களும் குறிப்பிட்ட சமுதாத்தினர் மீது அசிங்கமான அர்ச்சனைகளுமாக செய்யபடுகின்றனவே தவிர கருத்துக்கு எதிரான மாற்றக் கருத்தை அறிவுபூர்வமாக யாரும் எடுத்து வைப்பது இல்லை. 


இதற்க்கு கடவுள் கொள்கை பொருப்பாக முடியாது என்ற யதார்தத்தை உணர்ந்து ஒரு மதத்தினை பற்றி விமர்சிக்க நினைப்பவர் அதைபற்றி பூரணமாக அறிந்தவர்களோடு விவாதிக்க முன் வரவேண்டுமே தவிர இணையம் என்ற திறந்தவெளியில் மதத்தினை விமர்சிப்பது மதத்தின் பெயரில் அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகளை போன்று மத்தினை விமர்சித்து அதிக ஹிட்டுகள் வாங்க முற்படும் பதிவுலக வியாபரிகள். 

இத்தகைய மதவெறிபிடித்த பதிவுகளில் விவாதம் செய்ய முற்படும் சகோதரர்களுக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களுக்கு என் வேண்டுகோள் இதுதான் இத்;தகைய மதவெறி பிடித்த பதிவர்கள் அடிக்கடி சீண்டுவது முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் தான்> இஸ்லாம் விமர்சனங்களை கண்டு  ஒருபோதும் பின்வாங்கியது இல்லை ஆனால் அது நெறியான முறையான ஒரு களத்தில் அமையவேண்டு இல்லையேனில் அது ஒருபோதும் முற்றுபெறாத விதண்டாவாதமாகவும் வீண்தர்கமாகவும் அமையும். இத்தகைய வீண்தர்கத்தைதான் கடவுள் கொள்கைகளை விமர்சிக்கும் வியாபாரிகளின் வியாபார யுக்தி என்பதை கருத்தில் கொண்டு மதவெறிபிடித்த பதிவுகளை உதாசீனப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment