Sunday, 15 May 2011

இது ஒரு துரோக வரலாறு...,

சமுகத்தில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகளை நம் பார்வைக்கு தருவதில் மிகப் பொரும் பங்கு வகிப்பது தொலைகாட்சிதான். 

இப்படி ஒரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் மனிதர்களின் சமுகபார்வை ஒரு குறுகிய வட்டதிற்குள்ளேயே முடங்கி போயிருக்கும். 


ஒரு காலத்தில் பொழுது போக்கு மற்றும் தகவல் போன்ற விடயங்களில் ரெடியோ மட்டுமே ஆதிக்கம் செலுத்தின  அதன் பிறகு வந்த தொலைகாட்சி அதுவரை ரெடியோ செய்தவந்த பணிகளை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து பொழுது போக்கு மற்றும் தகவல் போன்ற விடயங்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிட்டது இதன் காரணமாக மக்கள் ரேடியோவை புறக்கணித்து தொலைகாட்சியின் பக்கம் திரும்பிவிட்டனர். 

கொடுப்பதை வாங்கிக்கொள் என்ற தொலைகாட்சியின் ஆணவத்தை அடக்கி! நீங்கள் கேட்பதை எல்லாம் தருவேன் என்று வந்துவிட்டது இணையம் ஆகவே இப்போது தொலைகாட்சியின் பவுசு குறையதொடங்கி இணையதின் மவுசு ஏற தொடங்கியுள்ளது. 

அன்று தொலைகாட்சி ரேடியோவிற்க்கு செய்த துரோகத்தினை இன்று இணையம் தொலைகாட்சிக்கு செய்கிறது. 
 
இப்போது சொல்லுங்கள், ஓவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றமும் அதற்க்கு முந்தைய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் இழக்கச் செய்த துரோக வரலாறுகள் தானே!
 
இது ஒரு துரோக வரலாறு என்ற இப்பதிவின் தலைப்பை '"மொக்கை தரும் வெக்கை" என மாற்றிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment