வழக்கு
1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் மாணவர் நாவரசு, சீனியர் ஜான்டேவிட்டால் ராக்கிங் என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்யபட்டார்.
1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் மாணவர் நாவரசு, சீனியர் ஜான்டேவிட்டால் ராக்கிங் என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்யபட்டார்.
தீர்ப்பு-1
1998-ம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு கூறியது.
தீர்ப்பு-2
1998-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் போதுமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஜான்டேவிட்டுக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
தீர்ப்பு-3
2011-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடலுர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்திற்க்கு மேல் வேறு ஏதாவது நீதிமன்றங்கள் மிச்சமிருந்தால் இந்த தீர்ப்பு இனியும் மாற்றப்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது.
நான் ஒரு வழக்கறிஞன் கிடையாது ஆனால் தவறு செய்தவனுக்கு தண்டணை கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்கின்ற ஒரு சாதாரண குடிமகன்.
ஒரு குற்றத்தால் பாதிப்புக்கு உள்ளானவனே குற்றம் செய்தவனுக்கு தண்டணை கொடுக்க கிளம்பிவிட்டால், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் என்று நன்றாக தெரிந்து வைத்திருப்பவன் அதனால் தான், தவறு எது....., சரி எது ...., என்று தீர விசாரித்து நீதி வழங்கிட அமைக்கப் பட்டுள்ள நீதிமன்றங்களை நாடுகிறேன் ஆனால் அங்கேயே இத்தனை குழப்பம் என்றால் வேறு எங்கே செல்வது?
ஓரு சாதாரண டீ கடையில் கூட இதை சாப்பிட இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்துள்ளான் ஆனால் பலரின் தலைவிதியை மாற்றி எழுதக் கூடிய தீர்ப்புகள் வழங்கும் நீதி மன்றங்களில் தெளிவான அணுகு முறையோ சட்டமோ இல்லாதது ஏன்?
வேறுபட்ட வழக்குகளில் குற்றங்களுக்கு அதன் பின்னனி மற்றும் பல காரணங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் ஒரே வழக்கில் முன்று விதமாக தீர்ப்பு வருவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
சமீபத்தில் துபாயிலும் ஒரு வழக்கு நடந்தது.
ஓரு சிறுவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கிட்டதட்ட நான்கரை மாதங்களிலேயே வழக்கை விசாரித்து குற்றவாளிக்கு மரண தண்டணை வழங்கியது இங்குள்ள நீதி மன்றம்.
இந்த வழக்கிலும், முறையீடு மேல் முறையீடு என்ற பல நிலைகளைத் தாண்டிதான் குற்றவாளிக்கு தண்டணை என்ற நிலை வந்தது ஆனால் இந்த முறையீடுகள் குற்றவாளிக்கு தண்டணையை குறைக்க வேண்டுமா அல்லது கூட்ட வேண்டுமா என்பதற்காக தான் இருந்ததே தவிர இவன் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கவே 14 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்த கேலி கூத்துக்கள் நடக்கவில்லை.
பெற்ற பிள்ளையை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் குற்றவாளியும் தப்பிவிட்டதை எண்ணி மனம் புளுங்கிய நாவரசின் பெற்றவர்களுக்கு இந்த குளறுபடி மன்றங்கள் என்ன பதில் சொல்ல போகின்றன?
முச்சந்தியில் நின்றுகொண்டு ஒரு மாநிலத்தின் முதல்வரை விமர்சிக்க அனுமதி உள்ள நமது நாட்டில், நீதிதுறையின் இந்தகைய குளறுபடிகளை கண்டிக்க ஒரு வழியும் இல்லை காரணம் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும்.
மன்னித்துவிடு மாணவனே, இது எங்கள் ஜனநாயக நாடு......!!!!
1 comment:
நீதி மன்றங்களின் நேர்மையை காண.நீதி மன்றங்களின்
தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் என்ற வினவு.காம் செல்லவும்
Post a Comment