'கியூ'வில் நின்று ஓட்டு போட சொன்னதால் நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு.
'கியூவை' முந்திக் கொண்டு ஒட்டு போட சென்ற கேரளா நடிகை காவ்வியா மாதவனுக்கும், வாக்காளருக்கும் தகராறு.
பத்திரிக்கைகளில் நடிகைகளை பற்றிய செய்திகளை படிக்கும் போது ஒரு பிரபலம் என்ற காரணத்தால் என்னவெல்லாமோ எழுதுகின்றார்களே என்று தோன்றும் ஆனால் மேலே குறிபிட்டுள்ள இரண்டு நிகழ்வுகளையும் பார்க்கும்போது இத்தனை பேர் பார்த்துகொண்டிருக்கும் போதே நாங்க முந்திகொண்டு போவோம் யாரு எங்களை கேட்பதற்க்கு என்ற ஆணவச் செயலை பார்க்கும் போது இவர்களின் மீது வாக்குசாடியில் இடையூறு ஏற்படுத்தியதற்காக வழக்கு பதிவுசெய்து உள்ளே தள்ளாமல் விட்ட போலீஸாரின் மீதுதான் கோபம் வருகிறது.
நடிகை என்றால் பல்லை இளித்துக்கொண்டு ஜொல்லு விட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. (ஒரு வேளை மேக்கம் இல்லாம வந்திருப்பாங்களோ படத்தையும் வீடியோவையும் பார்த்தா அப்படி தெரியலையே) நீ எந்த பருப்பா இருந்தா என்னா போய் வருசையில் நில்லு எற்ற அந்த வாக்காளர்களுக்கு என் நெஞ்சார்ந்த ஆதரவுகள்.
No comments:
Post a Comment