Wednesday 20 April 2011

புரட்சி நாயகர்கள்.....!

புரட்சி தலைவரே..!
புரட்சி தலைவியே..!
புரட்சி தளபதி..!
புரட்சி கலைஞரே..!
புரட்சி தமிழன்..! என்று தமிழில் புரட்சி என்ற வார்த்தை எந்த அளவு கொச்சைபடுத்த முடியுமோ அந்த அளவு கொச்சைபடுத்த பட்டு கேலி செய்யப்பட்டு இப்வெல்லாம் "புரட்சி தமிழன்" என்ற வார்த்தைக்கும் "நாய் சேகர்" என்ற வார்த்தைக்கும் அதிக வித்தியசத்தை உணர முடியவில்லை.




எதையுமே ஒரு எல்லைக்குள் நிறுத்த தெரியாததில் முதலிடம் வகிப்பவர்கள் நாம்.

தேர்தல் நேரத்தில் காலில் விழுந்து ஒட்டு பிச்சை கேட்க்கும் அரசியல் பிச்சைகாரர்களை, கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவ காத்திருக்கும் நம் வீட்டு அரசியல் வேலைகாரர்களை, தேர்தல் முடிந்த பிறகு, தேர்ந்தேடுக்கும் மக்களுக்கு குறைந்த பட்சம் உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை, எழை எளியவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை சுரண்டும் 'ஊழழ்'வாதிகளை எங்கள் இதயதெய்வமே! வாழும் தெய்வமே! எங்களின் எதிர்காலமே! என்று அடைமொழி வைத்து புகழ்பாடும் நல்ல மனசு நம் தமிழ் மக்களை தவிற வேறுயாருக்கும் இருக்க முடியாது.

இதுகூட பரவாயில்லை அரசியல்வாதிகள் தேர்தலுக்கு தேர்தலவது மக்களை தொடர்புகொள்பவர்கள், ஆனால் நமது தமிழ் திரையுலக அட்டைகத்தி நாயகர்கள் வைத்திருக்கும் அடைமொழியோ  இனி அடுத்த தமிழ் செம்மொழி மாநாட்டில் புதிய அடைமொழிகளை கண்டுபிடித்து தருமாறு தமிழ் அறிஞர்களிடம் கேரிக்கை வைக்கும் அளவிற்க்கு தமிழில் உள்ள அத்தனை அடைமெழிகளையும் இவர்கள் ஆக்கிரமித்து கொண்டார்கள், இளைய தளபதி! புரட்சி தமிழன்! உலக்கை நாயகன்! ஐயஐயோ வேண்டாம் அந்தபட்டியல்.

மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒரு சாதாரண விடயமாக தோன்றினாலும் ஒருவரின் மீது வைக்கப்படும் இந்த எல்லையற்ற புகழ்ச்சி மறைமுகமாக எத்தனையோ சமுக கேடுகளுக்காண காரணிகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.

நாம் செய்யும் இந்த எல்லையற்ற புகழ்ச்சி அரசியல்வாதிகளோடும், அட்டைகத்திகளோடும் நின்றுவிடுவதில்லை மாறாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் அரசு மருத்துவ மனைகள் என்று  எங்கும் வியாபித்து நிற்கின்றது, அரசு அலுவலகங்களிலோ காவல் நிலையங்களிலோ வருகின்ற மக்களை இருக்கையில் அமர்த்தி அவர்களின் தேவைகளை கேட்டறியும் அடிப்படை நாகரீகம் கூட தெரியாதவர்களாக ஆகிவிட்டார்கள் அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள், யதார்தத்தில் அங்கே பம்மிக்கொண்டும் ஐயா, ஐயா என்று கூழை கும்பிடு போட்டால்தான்; காரியம் நடக்கும் இல்லை என்றால் தேவையற்ற அலைச்சல்தான், காரணம் கடமைய செய்கின்றான் என்ற யதார்தத்தை மீறி அவர்களை புகழ்ந்ததுதான் அது இப்பபோது லஞ்சம் என்றும் ஊழல் என்றும் பரிணாம வளர்ச்சியடைந்துவிட்டது.

'ஊழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை' என்ற சொல் பதத்திற்க்கு சரியான எதிர்பதம் இருந்தால் அதை அப்படியே சினிமாவிற்க்கு பொருத்திவிடலாம் 'ஊதியத்திற்கேற்ற உழைப்பில்லாத' ஒரு துறை. வாங்கும் சம்பளமோ கோடிகளில் அதற்கு மாறாக உலக்கை நாயகர்களின் உழைப்பு என்று அவர்கள் இந்த சமுகத்திற்கு தருவது கதாநாயகிகளோடு கட்டிப்புரளும் காமரசம் கொட்டும் காட்சிகள் தான்.  இப்படி சாதாரண மக்களோடு எள்ளவும் தொடர்பில்லாதவர்களை, நாளைய முதல்வர் கனவில் மிதக்கவிட்டதும் இந்த எல்லையற்ற புகழ்ச்சிதானே.

இரண்டரை மணிநேரம் படம் பார்ந்துவிட்டு சினிமா தியேட்டரை விட்டு வெளியே வரும்போது கழிப்பறையில் புகுந்து அடக்கிவைத்திருந்த சிறுநீரை வெளியே விட்டு விட்டு வருவதுபோல் இவர்களின் நினைவையும் அங்கேயே விட்டு விட்டு வந்திருந்தால் அரசியல் இன்று இந்த அளவு நாற்றம் எடுத்திருக்காதே.

பெற்ற தாயும் வளர்க்கப் பாடுபடும் தகப்பனும் செய்யாத தியாகங்களை இங்கே யாரும் நமக்காக செய்துவிடவில்லை ஒரு அரசியல்வாதியோ, அதிகாரியோ நேர்மையாக தன் கடமையே செய்வாரேயானால் நன்றிசொல்கிறோம், புகழ்கிறோம் என்ற பெயரில் அவரையும் வழிதவற செய்ய தூண்டுகிறர்களே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு.  

1 comment:

பொன் மாலை பொழுது said...

படிதவர்களாய் தங்களை எண்ணிகொள்ளும்.காட்டிகொள்ளும் நிறைய பேர்கள் இந்த வியாதியினால் மூளை கெட்டுப்போய் உள்ளனர். தாம் அப்படி இருப்பதையே உணராத "அறிவுஜீவிகள்" இந்த வலைதளங்களில் கூட நிறைய உண்டு. யாராவது ஒரு நடிகனைப்பற்றி விமர்சனம் செய்துவிடுங்கள் பிறகு பாருங்கள் அனானியாக வந்து அவர்கள் அடிக்கும் கூத்துக்களை, பேசும் பேச்சுக்களை. மகா கேவலமாக இருக்கும்.

Post a Comment