ஒருநாள் நன்பர் ஒருவரை சந்திக்க அவர் தங்கியிருந்த இடம் செல்ல நேர்ந்தது, அவர் தங்கியிருந்தது அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு ஸ்டுடியோ அப்பார்ட்மென்ட். துபாய், சார்ஜா போன்ற இடங்களில் வாடகை என்ற பெயரில் எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்ட நேரம் அது. அந்த காலகட்டங்களில் அவர் தங்கியிருந்த இடத்திற்க்கு வாடகை கொடுக்கபட வேண்டுமானால் குறைந்தது 25,000 ஆயிரம் திரகமாவது கொடுக்க வேண்டும் ஆனால் நன்பருக்கு அவருடைய முதலாளி இலவசமாகவே அதுவும் தனியாக தங்க அனுமதியளித்து இருந்தார். இத்தனைக்கும் நான்பர் அவர் கம்பெனியில் டிரைவர்தான். நன்பர் வேறு ஒரு இடத்தில் டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது இவரின் சுறுசுறுப்பையும் வேலை என்று வந்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் செய்யக்கூடிய தன்மையையும் பார்த்து நன்பரின் தற்போதைய முதலாளி தான் ஒரு புதிய கம்பெனி தொடங்கிய போது இவரை வேலைக்கு சேர்ந்துக் கொண்டார், சரி இப்ப விசத்திற்க்கு வருவோம், நன்பாரை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது ஃபிளாட் ரொம்ப நல்ல இருக்கு இப்ப உள்ள வாடகைக்கு நாம பணம் கொடுத்து தங்கனும்னா சமாளிக்க முடியுமா? என்று கூறிகொண்டு வந்தபோது அதற்க்கு நம்ம நான்பர் சொன்ன பதில்.
"நமக்கு ஏன்பா இவ்வளவு பெரிய ஃபிளாட் அதான் நானே முதலாளிகிட்ட செல்லிட்டேன், நான் பில்டிங் வாட்சுமென் கிளீனரோட மெட்டை மாடியில் தங்கிக்கொள்கிறேன் என்று".
எளிமையாக வாழ நினைக்கும் ஒரு மனிதனின் எண்ண வெளிப்பாடு என்று இதையாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள் மாறாக இந்த பாலைவண மண்ணில் வேலை தேடி வரும் பொரும்பாலானவர்களின் எண்ண ஒட்டமே இப்படித்தான் உள்ளது. காலத்தின் கட்டாயத்தினால்; இப்படி வாய்புகள்; தானாகவே வந்தாலும் இதற்க்கு நான் தகுதியானவனா என்ற பயமோ அல்லது தழ்வுமனப்பான்மையோ வாய்புகளை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள விடாமல் தடுத்துவிடுகிறது.
இலக்குகள் அற்ற வாழ்வு தான் எங்களின் பொரும்பாலானவர்களின் இயல்பு. இதன் காரணமாகவே இங்கு இருக்கும்போதும் நம் நாட்டிற்கு திரும்பிய பிறகும் (My Life is Settled) என்று செல்லக்கூடிய நிம்மதியான வாழ்கையை அடைய முடிவதில்லை. ஆங்கிலத்தில் சொல்வார்கள் "You Can't Hit A Target That You Can't See" என்று ஆனால் எங்களுக்கு என்ன வேண்டும் என்பதிலேயே நாங்கள் தெளிவில்லாத போது அதில் எங்கே டார்கெட்டை போய் தேடுவது.
நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் ஏதாவது தவறு செய்தால் மேய்பான் இல்லாக மாடுகள் என்று திட்டுவார் எங்கள் ஆசிரியர், அவருக்குத் தெரியும் வழிகாட்ட வேண்டிய என் தந்தை வெளிநாட்டில் இருக்கின்றார் என்று. படிக்கும் பருவத்தில் தொடங்கிய குழப்பம் இன்றும் தொடர்கிறது.
இங்கு வேலை வேண்டி விண்ணப்பிக்கும் கடித்தில் அதிகமாக காணப்படும் ஒருவாக்கியம் "Applying for any suitable position" நான் என்ன வேலைக்கு தகுதியானவன் என்று தேர்ந்தெடுக்கும் பொருப்பையும் வேலை தருபவனிடமே ஒப்படைத்துவிடும் பொருப்பானவர்கள்! நாங்கள்.
பிஸ்ஸி கம்பியூட்டர் சைன்ஸ் படித்த ஒருவர் தேரா-துபையில் ஒரு சிரிய துணிகடையில் துணிமடித்த காட்சியை வேதனையுடன் பார்திருக்கிறேன். பின்னர் தான் தெரிந்தது நினைத்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை பிடித்துக்கொள்ளவேண்டும் என்பது விசிட் விசாவில் வருபவர்களுக்கு இங்குள்ள எங்கள் முன்னோர்கள் தரும் பாலபாடம். "இப்ப இந்த வேலையில் சேர்ந்து விசா மாற்றிக்கொள் கொஞ்ச நாளைக்கு அப்புறம் வேற நல்ல வேலையாக பார்த்து மாறிவிடலாம்" என்ற அறிவார்ந்த அறிவுறைகள் ஏராளமாக இங்கு கிடைக்கும், கொஞ்ச நாள் என்பது நான் படித்தவன் என்ற உணர்வே மறத்துப்போகும் வரைதான் என்பது அறியாமல் ஆபீஸ் பாயாகவும் மெசன்ஜர்களாகவும் சேரும் எம்.பி.ஏ க்களும் பி.பி.ஏ க்களும் இங்கு ஏராளம்.
இந்தியவின் ஊழல் அரசியலை பற்றி பேசும் போது ஒருவர் சொன்னார், 800 வருடம் மொகலாயர் ஆட்சி, பின் ஆங்கிலயர் ஆட்சி என்று நம் நாட்டு மக்களுக்கு அடிமைகளாக இருக்க மட்டுமே தெரியுமே ஒழிய, யாருக்கும் ஆட்சி செய்யத் தெரியாது என்று. அதேபோல் இங்கு வரும் பொரும்பாலானவர்களுக்கு நல்ல அடிமைகளாக இருக்க மட்டும் தான் தெரிகிறதே தவிற இதலிருந்து மீழ வழிதெரியவில்லையே என்ற ஆதங்கமே இப்பதிவின் துவக்கம்.
No comments:
Post a Comment