Sunday 20 March 2011

வளைகுடா இந்தியன்

அன்னியச் செலவானியை இந்தியவிற்க்கு ஈட்டிகொடுப்பதில் பெரும்பங்கு வளைகுடாவில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு உள்ளது. இவர்களில் பொரும்பாலும் கேரளா மற்றும் இந்தியாவின் மற்ற தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். 2005 வருடத்தின் கண்கெடுப்பின் படி ஐக்கிய அரபு அமீரகத்தின் (துபாய்) மற்ற நாட்டவரையும் சேர்த்து உள்ள மக்கட்தொகையில் 40 சதவிகிதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
ஜிசிசி எனப்படும் சவுதி, கத்தார், குவைத், பகரைன், துபாய் மற்றும் ஓமன் நாடுகளில் 6 மில்லியன் இந்திய தொழிலாளர்கள் இருப்பதாக கூறுகிறது. இதில் பெரும்பாலும் கட்டிட கட்டுமான வேலை செய்பவர்கள், வீட்டு டிரைவர்கள், கிளீனர்கள், பேன்று கடைநிலை ஊழியர்கள் தான் அதிக அளவில் உள்ளனர்.  அதிகமான இந்திய தொழிலாளர்கள் துபாயை நோக்கி வருவதற்க்கு காரணம் ஒப்பீட்ளவில் மற்ற நாடுகளைவிட அதிக சம்பளம் கிடைப்பதும் மற்ற நாடுகளைவிட விசா நடைமுறைகள் இலகுவாக இருப்பதும் தான் கடந்த நான்கைந்து வருடங்களில் (Construction Industry) கட்டுமான துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியும் அதனால் அத்துறை சார்ந்த தொழில்கள் வாரி வழங்கிய வேலை வாய்ப்புகளும் 2009ஆம் ஆண்டு தொடக்கம் வரை துபாய்; வரை வந்தாரை வாழவைக்கும் பூமியாக விளங்கியது. 2008ஆம் ஆண்டின் மத்தியில் ஏற்பட்ட பொருளாதார சரிவு துபையின் கட்டுமான துறையையும் சிறிது சிறிதாக பாதிக்க தொடங்கி 2009 தொடக்கத்தில் அதன் முழு ரூபத்தையும் காண்பிக்கத் தொடங்கியது அதன்விளைவாக ஐடி துறையில் ஏற்பட்ட வேலை இழப்புகளுக்கு நிகராக துபையிலும் எங்கு நோக்கினும் வேலை இழப்புகள் ஏற்பட்டன இதில் பரிதாபமான விசம் என்னவென்றால் இந்திய ஊடகங்களை ஐடி துறையின் வேலை இழப்புகளை பற்றிய செய்திகள்; கவர்ந்த அளவு இந்தியவிற்கு கோடிகளை ஈட்டித்தரும் இந்திய வளைகுடா தொழிளார்களின் பிரச்சனைகள் ஒருபோதும் கவர்வது இல்லை. இதற்க்கு உதரணமாக ஆஸ்த்ரேலியாவில் மாணவர்கள் தாக்கப்ட்ட போது கதறி அழுத இந்திய ஊடகங்களும், அரசும் அரசியல்வாதிகளும் வளைகுடா நாடுகளின் இந்திய தொழிளார்களின் ஜிவாதார பிரச்சணைகளை கூட செவிமடுத்து கேட்பது இல்லை.

இதில் இந்திய அரசை பொருத்தவரை (Non Residence Indian ) வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்று சொன்னால் அமெரிக்கா. கணடா, ஆஸ்த்ரேலியா போன்ற மேற்கத்திய நாடுகளில் வேலை செய்பவர்கள் மட்டும்தான் என்ற கண்னோட்டமே உள்ளது. ஒரு காலத்தில் NRI வங்கி கணக்கு தொடங்குவதற்க்கு வங்கிக்கு சென்றால் இருக்கையில் அமர்த்தி வங்கி மேலாளரே விளக்கி கூறி கணக்கு தொடங்குவதற்க்கு உதவிபுரிந்தது எல்லாம் இனி வரலாறில் கூட காணமுடியாது யாராவது பிளாக்கில் கிறுக்கி வைத்திருந்தால் தான் உண்டு. வாங்கிகளுக்கும் டாலர் தும்பிகள் மட்டும் தான் Non Residence Indian மற்றவர்கள் Not Required Indian தான்.

படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லாமல் வேலை வாய்ப்பும் அதன் மூலம் கோடி கோடியாக அன்னியச் செலவானியை இந்தியாவிற்க்கு தந்துகொண்டிருந்த வளைகுடா என்ற அட்சயப்பாத்திரம் சிறிது சிறிதாக பிட்சை பாத்திரமாக மாறிக்கொண்டிருக்கிறது அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கின்ற  வளைகுடா வாழ்கையின் தற்போதைய பேரிடி வளைகுடா நாடுகளில் அங்காங்கே அரசுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள். இதன் காரணமாக இங்குள்ள அரசுகள் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை மற்றும் அனைத்திலும் முதலுரிமை என்ற கொள்கையை தீவிரமாக அமல் படுத்த தொடங்கிவிட்டன ஒரு அரசின் பார்வையில் அதுதான் சரியான நடவடிக்கையும் கூட அதை இங்குள்ள அரசுகள் சரியாக செய்கின்றன ஆனால் வேலை இழந்து திரும்பிவரும் இந்தியர்களுக்கு உதவி செய்யும் வகையில் எந்த ஒரு உருப்படியான திட்டமும் இந்திய அரசிடம் உள்ளதாக தெரியவில்லை இதைபற்றி சிறிதும் என்னாமல் நமது இந்திய ஊடகங்கள் புரட்சி வெங்காயம் என்று புழுகித் தள்ளுகின்றனவே தவிர இவ்விசயத்திலும் வளைகுடா இந்தியர்கள் யாரும் சீன்டாத அனாதைகளாகவே உள்ளனர் என்ற ஆதங்கமே இப் பதிவின் துவக்கம்.

4 comments:

Anonymous said...

Well said Aadil, No Indian Media is care about Gulf Indian works.Keep writing

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ.ஆதில், மிக அருமையான பதிவு.

அனைத்து வளைகுடா வாழ் இந்தியர்களின் ஒருமித்த குரலாய் உங்கள் ஆதங்க பதிவு ஓங்கி ஒலித்துள்ளது. மிக்க நன்றி... சகோ.

நிலைமை மாறும் என்று கனவு கண்டு கூடவே அவசியம் நம் நிலை முன்னேற பிரார்த்திப்போம்.

இப்படிக்கு,
ஒரு NRI--"Non Required Indian"
சவூதி அரேபியா.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ. ஆதில் அவர்களுக்கு:

இது ஒரு சிறந்த பதிவு.
இது அவசியம் பலரை சென்றடைய வேண்டும்.
எனவே... தமிழ்மணம் மட்டுமல்லாது,மேலும், அதுபோன்ற தமிழ் பதிவு திரட்டிகளான...
இன்ட்லி, தமிழ்10, உலவு, திரட்டி, thatstamil.oneindia.in புக்மார்க் என இங்கெல்லாம் இப்பதிவை தங்கள் பெயரிலேயே இணைக்க வேண்டுகிறேன்.

ராம்ஜி_யாஹூ said...

நண்பரே, வளைகுடா என மாற்றுங்கள், வலைகுடா இல்லை
இன்னும் ஒரு வரியில், போன்ற என்ற வார்த்தை பிழையாக இருக்கிறது

Post a Comment