Friday, 18 February 2011

என் பதிவுகள் பிறந்தகதை....,

பிரபலமான இணைய இதழ்கள் சிலவற்றில் சந்தா செலுத்தி படித்து பொது அறிவைப் பெருக்கி கொள்ளும் புத்திசாலிகளில் நானும் ஒருவன்>

அனேகமாக எல்லா இணைய இதழ்களிலும் ஒரு செய்தியை பிரசுரித்து அக்கட்டுரையின் அடியிலேயே வாசகர்களின் கருத்தை பதியக்கூடிய வகையில் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்கள் இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இதில் பிரச்சனை என்னவென்றால் வாசகர்கள் பதிக்கும் அனைத்து கருத்துகளும் அப்படியே பிரசுரிக்கப் படுவதில்லை தனிக்கையாளரின் தனிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பிரசுரிக்க படுகிறது. இது ஒருவகையில் நல்ல ஏற்பாடுதான் என்றாலும் தனிக்கை என்ற பெயரில் தங்களுக்கு இணக்கமான கருத்துக்களை மட்டும் முழு சுதந்திரத்தோடு பதிய அனுமதிப்பது, எதிரான கருத்துக்களை பிரசுரிக்க மறுப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

ஊடகங்களில் பொதுவாக தனிக்கை என்பது எது அதன் வரைமுறைகள் என்ன அதன் எல்லை எதுவரை என்பனவற்றில் முற்றுபெறாத விவாதங்கள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் என்னுடை ஆதங்கமெல்லாம் தனிக்கையின் அளவுகோல் எதுவாயினும் அதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதுதான். கருத்து சுதந்திரம் எழுத்து சுந்திரம் என்பதுவெல்லாம் பத்திரிக்கைகளுக்கு மட்டும் தானா அதை பணம் செலவழித்து வாங்கி படிக்கும் வாசகர்களுக்கு கிடையாதா? மேலும் எனக்கு தெரிந்தே நடந்த ஒரு நிகழ்வினை பற்றிய செய்தியினை முற்றிலும் உண்மைக்கு புறம்பாக எழுதியிருத்தார்கள் அது தவறு என்று அச் செய்தியினை வாசிக்கும் அனைவரும் அறிய வேண்டும் என்றால் வாசகர்கள் கருத்து பதியும் இடம் ஒன்றே வழி ஆனால் அதுவும் பல நேரங்களில் தனிக்கை என்ற பெயரில் தார் பூசப்பட்டுவிடும் இன்னும் இதுபோன்ற பல காரணங்களால் கடந்த ஆறுமாதமாக இணைய இதழ்களின் சந்தாவை புதுபிக்காமல் விட்டு விட்டேன்.  

இணைய ஊடகத்தில் உள்ள சற்று ஆறுதலான விசயம் நம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வழி உள்ளது ஆனால் மற்ற ஊடகங்களில் அது கிடையாது உதாரணமாக தொலைகாட்சியில் செய்தியின் வழியாகவோ அல்லது வேறுவிதமான நிகழ்ச்சிகளின் வாயிலாக சமுகத்திற்க்கு எதிரான ஒரு நச்சு கருத்து பதிக்கப் படுமாயின் அதை பார்த்துவிட்டு வாய் மூடி மௌனியாக தான் இருக்க வேண்டும் அல்லது சொல்லபட்ட கருத்து தவறானது என்று இணையதளத்தில் வந்துதான் பேச முடியுமே தவிர அச் செய்தி சென்றடைந்த அத்தனை பேரிடம் சென்று நம் கருத்தை பதியவைக்க முடியாது>

இப்படி எழுத முடிந்த மற்றும் எழுத முடியாத பல்வேறு ஆதங்கங்களின் தொகுப்பே என் பதிவுகள் பிறக்க காரணமாக அமைந்தன, இங்கு இலக்கணப் பிழை இலக்கியப் பிழை மட்டுமல்ல உச்சக்கட்ட கொடுமையாக எழுத்துப் பிழையும் எங்கும் வியாபித்திருக்கும் காரணம் படிக்கும் போது படிப்பை தவிற மற்ற அனைத்து உட்டாலங்கடி வேலைகளையும் சரியாக செய்ததால் வந்த கர்மவினைதான்.  

படிச்சுவிட்டு மனசுகுள்ளயே திட்டிவிட்டு போகாமல் உங்கள் ஆதங்கங்களையும் ஆதரவையும் கமெண்ட்சில் சொல்லிவிட்டு போங்கள் கண்டிப்பாக திருத்திகொள்கிறேன் உங்கள் கருத்தை நான் ஆதரிக்கும் பட்சத்தில்..,

No comments:

Post a Comment